ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நோக்கியா C12 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
முன்னதாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய நோக்கியா C12 மாடலில் 6.3 இன்ச் HD+ ஸ்கிரீன், யுனிசாக் 9863A1 பிராசஸர், 2 ஜிபி ரேம், 2 ஜிபி கூடுதல் மெமரி எக்ஸ்பான்ஷன் வசதி உள்ளது.
ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ் கொண்டிருக்கும் நோக்கியா C12 இரண்டு ஆண்டுகளுக்கு காலாண்டு முறையில் செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் மெல்லிய நார்டிக் டிசைன் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
நோக்கியா C12 சிறப்பம்சங்கள்:
6.3 இன்ச் 1600×720 பிக்சல் HD+V நாட்ச் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் யுனிசாக் SC9836A பிராசஸர்
IMG 8322 GPU
2 ஜிபி ரேம்
64 ஜிபி மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்
டூயல் சிம்
8MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
5MP செல்ஃபி கேமரா
3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
மைக்ரோ யுஎஸ்பி போர்ட் 3000 எம்ஏஹெச் பேட்டரி
நோக்கியா C12 ஸ்மார்ட்போன் டார்க் சியான், சார்கோல் மற்றும் லைட் மிண்ட் நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 5 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை அமேசான் வலைத்தளத்தில் மார்ச் 17 ஆம் தேதி துவங்குகிறது.