இந்தோனேஷியாவில் 6 ஆண்டுகளாக கழுத்தில் சிக்கிய டயருடன் அவதிப்பட்டு வந்த முதலைக்கு அதில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது.
இந்தோனேஷியாவில் கழுத்தில் சிக்கிக் கொண்ட டயருடன் அவதிப்பட்ட முதலையிடம் இருந்து டயர் எடுக்கப்பட்டது.
பலூ நகரத்தில் உள்ள ஆற்றில் இருந்த முதலை ஒன்று இருசக்கர வாகனத்தின் டயர் கழுத்தில் சிக்கி அவதிப்பட்டு வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக சிக்கியிருந்த அந்தத் டயரை அகற்ற எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளும் தோல்வியடைந்தன.
டயரை அகற்றுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என பலூ நகர நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் டிலி என்பவர், கோழி உள்ளிட்டவற்றை இரையாக காட்டி முதலையை கரைக்கு வரவழைத்து கயிறு கட்டி அதன் கழுத்தில் இருந்த டயரை அப்புறப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து முதலை மீண்டும் நீரில் விடப்பட்டது. இதனால் பலூ நகர மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.