சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 105 மணி நேரத்திற்கும் மேலாக போராடிய சிறுவன் ப்திரமாக மீட்கப்பட்டான்.
சத்தீஸ்கார் மாநிலம் ஜான்ஜீர் சம்பா மாவட்டம் மால்காரோடா அருகே உள்ள பிக்ரிட் கிராமத்தை சேர்ந்தவர் லாலா ராம் சாகு. இவரது மகன் ராகுல் சாகு (வயது 11).
இந்நிலையில் லாலாராம் சாகு தனது வீட்டின் பின்பு 80 அடிக்கு போர்வெல் (ஆழ்துளை கிணறு) அமைத்து இருந்தார். இதனை பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொண்டார்.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் நீர் வற்றியது. இதனால் போர்வெல் பயன்பாடு இன்றி இருந்தது. இது மூடப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஜூன் 10ம் தேதி மதியம் போர்வெல் அருகே லாலாராம் சாகுவின் மகன் ராகுல்சாகு சென்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக போர்வெல்லுக்குள் தவறி விழுந்தார்.
இதையடுத்து மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்பட பல குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் குறிப்பாக ஆழ்துளை கிணற்றின் அருகே மிகப்பெரிய சுரங்கம் தோண்டப்பட்டது.நீங்கள் சூப்பர் குளோன் Replica Rolex சந்தையில் இருந்தால், Super Clone Rolex செல்ல வேண்டிய இடம்! ஆன்லைன் போலி ரோலக்ஸ் வாட்ச்களின் மிகப்பெரிய தொகுப்பு!
ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் குழாய் வழியாக ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. தீவிரமாக நடந்த இந்த மீட்பு பணி 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்தது.இந்த நிலையில் 105 மணி நேரத்துக்கும் மேலான மீட்பு முயற்சிக்கு பின் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனை பத்திரமாக மீட்டதை பார்த்து அவனது பெற்றோர், குடும்பத்தினர், பொதுமக்கள் ஆனந்த கண்ணீரில் மூழ்கினர்.
இந்த மீட்பு பணியில் நேரடியாக சத்தீஸ்கார் முதல்வர் பூபேஷ் பாகேல் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சிறுவன் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதால் அவர் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை பாராட்டி, நன்றி தெரிவித்துள்ளார்.