ஜூலை 1 முதல் கார்டு-டோக்கனைசேஷன் நடைமுறைக்கு வருவதால் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விதிகள் மாற்றப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது எதற்காக அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் யாருக்கு என்ன பயன். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் கார்டு-டோக்கனைசேஷன், வாடிக்கையாளர்கள் கார்டு பரிவர்த்தனைகளை நடத்தும் முறையை மாற்றும் வகையில் அமைத்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக் காரணங்களுக்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஜூன் 30 ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்களின் கார்டு தரவை வணிகர்கள் தங்கள் சர்வர்களில் சேமித்து வைப்பதை தடை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
கார்டின் கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் செய்ய வணிகருக்கு ஒரு நிலையான அறிவுறுத்தலை வழங்கவும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட டோக்கனைப் பயன்படுத்தி பரிவர்த்தனையை முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
அதுமட்டும் அல்ல கார்டின் கார்டு ஆன் ஃபைல் டோக்கனைசேஷன் செய்ய வணிகருக்கு ஒரு நிலையான அறிவுறுத்தலை வழங்கவும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட டோக்கனை பயன்படுத்தி பரிவர்த்தனையை செய்யவும் கூறியுள்ளது. இதற்கான காலக்கெடுவாக ஜனவரி 1 கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தொழில் நுட்ப அமைப்பை மாற்ற போதுமான கால அவகாசம் தேவை என்று நிறுவனங்கள் கோரிக்கை விடுத்த நிலையில், ஜூலை வரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கார்டு டோக்கனைஷேசன் என்பது கார்டு வழங்குபவர் மற்றும் கார்டு நெட்வொர்க்கினை தவிர, பரிவர்த்தனையில் ஈடுபடும் எந்தவொரு பங்குதாரரும் வாடிக்கையாளர்களின் விவரங்களை நேரடியாக அணுக முடியாது. இதனால் வாடிக்கையாளர்களின் தரவுகளையும் சேமிக்க முடியாது.
மேலும் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் தளங்களில் இருந்து டோக்கனை கோரும் போது, கார்டு வழங்குபவர்களின் ஒப்புதலுடன், கார்டு நெட்வொர்க் ஒரு டோக்கனை உருவாக்கும்.
ஆக ஜூலை 1-க்குப் பிறகு, ஷாப்பிங் தளங்கள் உள்ளிட்ட வணிக தரப்புகளிடம் உள்ள கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்கள் நீக்கப்படும் என்றும், முன்பு போல கார்டு எண்களை நேரடியாக அணுக முடியாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நடைமுறையில், ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் கார்டைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் போது, கார்டு-டோக்கனைசேஷனுக்கான ஒப்புதல் வழங்கப்படாவிட்டால், கார்டு தரவை கைமுறையாக தட்டச்சு செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் அட்டைத் தரவை டோக்கனைஸ் செய்ய சந்தா செலுத்தியிருந்தால், ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் அவர்கள் பரிவர்த்தனையை முடிக்க கார்டு டோக்கனைத் தொடர்ந்து சிவிவி மற்றும் ஒடிபி எண்ணை உள்ளிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும். மேலும் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி கிரெடிட் கார்டு வழங்குவது கூடாது. ஏற்கனவே இருக்கும் கார்டுகளுக்கும் மேம்படுத்தல் கூடாது.
அதேபோல வாடிக்கையாளர்களுக்கு மெயில் அறிக்கைகளை அனுப்புவதிலும் தாமதம் இருக்க கூடாது. வட்டி வசூலிக்க தொடங்கும் முன் 15 நாட்கள் இருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என பல அதிரடியான அறிவிப்புகளை கொடுத்தது.
இது தவிர, கிரெடி கார்டு உரிமையாளர் ஏதேனும் விளக்கம் கேட்டால், நிறுவனங்கள் சரியான விளக்கம் கொடுக்க வேண்டும். நெகிழ்வுத்தன்மை கொண்ட கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் வசதிக்கேற்ப கிரெடிட் கார்டின் பில்லிங் சுழற்சியை மாற்றுவதற்கான, ஒரு முறை விருப்பத் தேர்வு வழங்கப்பட வேண்டும்.
இந்த புதிய விதிகள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விதிகளை மீறும் நிதி நிறுவனங்கள் லாபத்தின் இரு மடங்கு தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது நினைவுகூறத்தக்கது .