மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பெருமழை பெய்தது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 164 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 100 பேர் வரை காணாமல் போயிருப்பதாகவும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை 2 லட்சத்து 29 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். துணை முதலமைச்சர் அஜித் பவார், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட சங்லி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை படகுகளில் சென்று பார்வையிட்ட அவர், உரிய உதவி கிடைக்கும் என மக்களுக்கு உறுதி அளித்தார்.