மணிப்பூரில் துபுல் என்ற இடத்தில், கடந்த புதன்கிழமை இரவு ராணுவ முகாமில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டம் துபுல் ரயில் நிலையம் அருகே, இந்திய ராணுவ 107 டெரிடோரியல் ஆர்மியின் முகாம் செயல்பட்டு வருகிறது.

இங்கு புதன் கிழமை இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மணிப்பூரில் ஜிரிபாமில் இருந்து இம்பால் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்பிற்காக மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் உள்ள துபுல் ரயில் நிலையம் அருகே இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான், இந்த திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 50 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய்விட்டனர். பலர் உயிருடன் புதைந்து போனார்கள். இதனையடுத்து மீட்பு பணிகள் ஆரம்பமாயின.

இதுவரை 13 ராணுவ வீரர்கள் மற்றும் 5 பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 18 ராணுவ வீரர்களின் சடலங்கள், 6 பொதுமக்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 12 ராணுவ வீரர்கள் மற்றும் 26 பொதுமக்களை தேடும் பணி இன்னும் தொடர்கிறது.

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 பேர் ராணுவ வீரர்கள். 44 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விபத்து பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் மந்தநிலை நிலவுகிறது. மண்ணில் புதையுண்ட வீரர்களைத் தேட ‘வால்-ரேடார்’ கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தேடுதல் பணியை துரித்தப்படுத்த இன்று காலை புதிய வீரர்கள் அடங்கிய மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம், அசாம் ரைபிள்ஸ், டெரிடோரியல் ஆர்மி, மாநில மற்றும் தேசிய பேரிடர் நிவாரண படை உள்ளிட்ட வீரர்கள் மூலம் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.